PM Modi Attacking Nehru: பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. பிப்.1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி கடந்த திங்கட்கிழமை (பிப். 5) மக்களவையில் உரையாற்றினார். அதை தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், வரும் மக்களவை தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை என்பதால் எதிர்பார்ப்பும் இருந்தது.
நேருவின் கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் கட்சி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எப்போதும் எதிராகவே இருந்திருக்கிறது என்று சாடினார். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) இடஒதுக்கீட்டை எப்போதும் முழுமையாக கொடுக்கவே இல்லை என்றும், அவர்கள் சமூக நீதி குறித்து பாடம் எடுக்க அருகதையற்றவர்கள் என்றும் பேசினார்.
பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய அவரது உரையின்போது, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் அன்றைய காலகட்டத்தில் மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை வாசித்தார். இந்த கடிதத்தை ஜவஹர்லால் நேரு கடந்த 1961ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுக்கு எழுதியதாகும்.
பிறப்பாலேயே எதிர்கிறார்கள்
அதில்,"நான் அதன் (கடிதத்தின்) மொழிபெயர்ப்பைப் படித்து வருகிறேன்: 'எந்தவிதமான இட ஒதுக்கீடும், குறிப்பாக சலுகைகள் எனக்குப் பிடிக்கவில்லை. திறமையின்மை மற்றும் இரண்டாம் நிலை தரங்களுக்கு வழிவகுக்கும் எதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என முன்னாள் பிரதமர் நேரு குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | In Rajya Sabha, Prime Minister Narendra Modi reads out a letter by the then PM late Jawaharlal Nehru to the then Chief Ministers.
He says, "....I am reading out its translation - "I dislike any kind of reservation, more particularly in services. I am strongly against… pic.twitter.com/MeulkyxRLP
— ANI (@ANI) February 7, 2024
இதன்மீது பேசிய பிரதமர் மோடி, "அதனால்தான் சொல்கிறேன் பிறப்பால் இட ஒதுக்கீட்டை அவர்கள் (காங்கிரஸ்) எதிர்க்கிறார்கள்... அந்தக் காலத்தில் அரசு இடஒதுக்கீடு கொடுத்து, வேலைக்கு சேர்த்து அவ்வப்போது அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்திருந்தால் இன்று ஆட்சியில் இருந்திருப்பார்கள்" என்றார்.
காங்கிரஸை வெளுத்து வாங்கும் பிரதமர்
பிரதமர் மோடி "மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான முழு இடஒதுக்கீடு காங்கிரஸ் வழங்கவே இல்லை. பாபா சாகேப் அம்பேதகர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என்று கருதாத காங்கிரஸ் கட்சி, அவர்களின் குடும்பத்தினருக்கே பாரத் ரத்னாவை அவர் வழங்கிவிபொதுப்பிரிவினரின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவே இல்லை. அவர்கள் இப்போது சமூக நீதி குறித்து நமக்கு பாடம் கற்பிக்கிறார்கள். தலைவர் என்பதற்கே உத்தரவாதம் இல்லாதவர்கள் எல்லாம், மோடியின் உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்" என்றார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய போதும் முன்னாள் பிரதமர் நேருவையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடியிருந்த நிலையில், இன்றும் தாக்கியிருப்பது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர், மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ