Budget Session: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முழு விவரம்

Narendra Modi Slams Congress: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கடுமையாக தாக்கி பேசினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 7, 2024, 03:57 PM IST
Budget Session: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முழு விவரம் title=

Prime Minister Narendra Modi Speech: நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். தற்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாகத் தாக்கி பேசி கிண்டல் செய்தார்.

ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசிய உரையின் விவரம்

-- ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் திறன், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார். ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார்.

-- கார்கே ஜிக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த கவனத்துடனும் மகிழ்ச்சியுடனும் நான் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். லோக்சபாவில் நாங்கள் தவறவிட்ட பொழுதுபோக்கின் பற்றாக்குறையை அவர் இங்கே ஈடுசெய்தார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கிண்டல் செய்தார்.

மேலும் படிக்க - கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

-- இதைத் தொடர்ந்து காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர், "உங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் மிகவும் பொறுமையுடனும் பணிவாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றும் நீங்கள் என் பேச்சைக் கேட்கக் கூடாது என தயாராக வந்துள்ளீர்கள். ஆனால் உங்களால் என் குரலை அடக்க முடியாது. எனக்கு நாட்டு மக்கள் பலம் கொடுத்துள்ளனர். நாட்டு மக்கள் என் பேச்சை கேட்க முடிவு செய்துவிட்டார்கள்.

-- அதிகார பேராசையில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த காங்கிரஸ், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்த காங்கிரஸ், நாட்டின் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தின் மாண்பையும் கம்பிக்குப் பின்னால் தள்ளி, பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தி, நாட்டை அடக்க முயன்றது யார்? 

-- நாட்டை பிளவுப் படுத்தும் வகையில் கதைகளை உருவாக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டது காங்கிரஸ். இப்போது வடக்கையும் தெற்கையும் பிளக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. இந்த காங்கிரஸ் நமக்கு ஜனநாயகம் குறித்த உபதேசங்களை வழங்குகிறது.

-- இந்திய பொருளாதாரத்தை 10 ஆண்டுகளில் 11வது இடத்திற்கு காங்கிரஸ் கொண்டு சென்றது. அதே கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5ம் இடத்திற்கு நாங்கள் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம் ஆனால் இந்த காங்கிரஸ் நமக்கு பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி பாடம் நடத்துகிறது.

மேலும் படிக்க - அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கேஎஸ் அழகிரி

-- பொதுப்பிரிவின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்காதவர். நாட்டின் சாலைகளுக்கும், தெருக்களுக்கும் தன் சொந்தக் குடும்பத்தின் பெயரைச் சூட்டியவர்கள், பாபா சாகேபுக்கு பாரத ரத்னா வழங்காதவர், சமூக நீதியை குறித்து நமக்குப் பாடம் நடத்துகிறார். 

-- காங்கிரஸ் தலைவருக்கு எந்த உத்திரவாதமும் இல்லாத காங்கிரசுக்கு கொள்கைக்கு உத்தரவாதம் இல்லை. மோடியின் உத்தரவாதம் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார்.

-- இந்த முறை காங்கிரஸால் 40 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது. காங்கிரஸ் கட்சி சிந்திக்க முடியாத அளவுக்கு காலாவதியாகி விட்டது. அவர்களின் சிந்தனை பழையதாகி விட்டால், அவர்கள் தங்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்து விட்டனர். 

-- இவ்வளவு பெரிய கட்சி, இவ்வளவு காலம் ஆட்சி செய்த கட்சிக்கு இவ்வளவு சரிவு. உங்களுக்கு எங்கள் அனுதாபங்கள்.

மேலும் படிக்க - தென் மாநிலங்களுக்கு தொடரும் அநீதி.. தனி நாடு கோரிக்கைக்கு எங்களை தள்ளாதீர்கள் -கர்நாடகா எம்.பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News