தென்னிந்தியாவில் IS தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு...திடுக்கிடும் தகவல்
நாட்டின் தென் மாநிலங்களில் IS தீவிரவாதிகளின் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது....
புதுடெல்லி: நாட்டின் தென் மாநிலங்களில் IS தீவிரவாதிகளின் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. புதன்கிழமை இதுபற்றி தெரிவித்த மத்திய அரசு, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என தென்னிந்தியா முழுவதும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பது தொடர்பான 17 வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு NIA பதிவு செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 122 பேரை கைது செய்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் Islamic State எனப்படும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருப்பது மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தனது சித்தாந்தத்தை பரப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில், இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறது என்று ஜி. கிஷன் ரெட்டி கூறினார். Cyberspace சம்பந்தப்பட்ட முகமைகள் இது தொடர்பாக உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான சில அமைப்புகளை இந்தியா தீவிரவாத அமைப்புகள் என தடை செய்துள்ளது.
"Islamic State/ Islamic State of Iraq and Levant/ Islamic State of Iraq and Syria/ Daish/ Islamic State in Khorasan Province (ISKP)/ ISIS Wilayat Khorasan/ Islamic State of Iraq and the Sham-Khorasan (ISIS-K) மற்றும் அதன் அனைத்து கிளை அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967க்கான முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR