ENG vs AUS 3 வது ODI: தொடரை வெல்வது யார்? வீழ்வது யார்?

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று மாலை 05.30 மணிக்கு தொடங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2020, 05:24 PM IST
  • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் 3 ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது
  • 2016 முதல் எந்த தனது மண்ணில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது
  • இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
ENG vs AUS 3 வது ODI: தொடரை வெல்வது யார்? வீழ்வது யார்? title=

மான்செஸ்டர்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று மாலை 05.30 மணிக்குத் தொடங்குகிறது. நடைபெறும். வென்று தலை நிமிர்வது யார், தோற்று பாடம் கற்பவர் யார் என்பதை முடிவு செய்யும் போட்டி இது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் 3 ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இது. முந்தைய இரு போட்டிகளிலும் England மற்றும் Australia தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில்  உள்ளன. இந்த விஷயத்தில், இந்த கடைசி போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மாலை 5:30 மணி முதல் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும்.

2016 முதல் எந்த தனது மண்ணில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் அனைத்திலும்  இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரில் ஒரு சிறந்த மறுபிரவேசம் செய்தது. இந்த அடிப்படையில், இந்த தொடரை வென்று தனது சாதனையை தக்க வைத்துக் கொள்ள இங்கிலாந்துக்கு இதுவொரு பொன்னான வாய்ப்பு ஆகும். இல்லாவிட்டால், இங்கிலாந்து கடந்த 4 ஆண்டுகளில் ஒருநாள் போட்டித்தொடரில் வெற்றி பெற்ற சாதனை அடிபட்டுப் போகும் என்பதால் வெற்றி பெற வேண்டியது இங்கிலாந்துக்கு மிகவும் அவசியமானது.  

கடந்த 4 ஆண்டுகளில், (Eoin Morgan) தலைமையிலான இங்கிலாந்து அணி, 2016இல் இலங்கை, பாகிஸ்தான், 2017இல் அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, 2018இல் இந்தியா, 2019 ல் பாகிஸ்தான், பின்னர் 2020இல் அயர்லாந்து என பல அணிகளை வீழ்த்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தொடரை வெல்வது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அதே நேரத்தில், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து தனது தனித்துவமான சாதனையை உள்நாட்டிலேயே தொடர முயற்சிக்கும்.
 

பேட்டிங் ஆஸ்திரேலியாவுக்கு தலைவலியாகிவிட்டது
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். Aaron Finch அணி இந்தப் போட்டியில்  தோல்வியுற்றால், இந்தத் தொடர் ஆஸ்திரேலிய அணியின் கைகளிலிருந்து நழுவுவது உறுதி. ஏனெனில் கடைசி போட்டியில், ஆஸ்திரேலியா   232 ரன்கள் இலக்கை நோக்கி மட்டை வீசிய போது, 207 ரன்களில் ஆட்டம் இழந்து, போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

அத்தகைய சூழ்நிலையில், இறுதி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியினர், பேட்டிங்கில் மிகவும் சாதுர்யத்தைக் காட்ட வேண்டியிருக்கும். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் David Warner ஒருநாள் போட்டியில் மோசமான நிலையில் இருப்பது அந்த அணிக்கு கவலை கொடுக்கும் விஷயம். அதே நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்தில் திரும்பி வந்து நடுத்தர வரிசையை வலுப்படுத்தலாம்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒருநாள் போட்டியின் முடிவை காண உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News