குஜராத் : குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தின் சுடா தாலுகா அருகே சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹையலால் பரையா(50). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.  இவர் அதே மாவட்டத்தில் உள்ள நினமா என்ற ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளியானது அவருடைய சொந்த ஊரில் இருந்து கிட்டத்தட்ட 75 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூரம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தினசரி இவ்வளவு தூரம் சென்று வர இயலாது என்பதால் பள்ளிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு ஒன்றை தேட ஆரம்பித்து இருக்கிறார்.  ஆனால் ஆசிரியர் கன்ஹையலால் பரையா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தினால் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் அவருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்துவிட்டனர்.


ஆனால் இதனை ஒரு பொருட்டாக கருதாத அந்த ஆசிரியர் தனக்கு பணி முக்கியம் என்பதால் தினசரி பயணிக்க முடிவெடுத்தார். பின்னர் தினமும் 150 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்.இந்த தகவல் பரவி,  இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், "என்னுடைய இந்த நிலைமை குறித்து நான் முதலமைச்சர் புபேந்திர படேலிடம் தெரிவித்ததோடு, வேறு ஏதாவது ஒரு ஊருக்கு என்னை பணி இடமாற்றம் செய்துவிடுங்கள் என்றும் கூறியிருந்தேன்.இருப்பினும்,அதற்கு தக்க பதில் எதுவும் முறையாக கிடைக்கவில்லை. 


மேலும் இதுகுறித்து சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்கையில், தற்போது விடுமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பட்டியலின சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது இந்த பகுதியில் சாதாரண விஷயம் தான் என்று கூறினார்கள்.ஆனால் ஆசிரியர்கள் இவ்வாறு பாதிக்கபடுவது மிகவும் வேதனையான ஒன்றாகும்"என்று கூறியுள்ளார்.


ALSO READ குடிபோதையில் மாணவர்களை தன்னுடன் நடனமாட வற்புறுத்திய தலைமை ஆசிரியர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR