குடிபோதையில் மாணவர்களை தன்னுடன் நடனமாட வற்புறுத்திய தலைமை ஆசிரியர்!

பள்ளிக்குள் போதையில் நுழைந்த தலைமையாசிரியர் ஒருவர் சில மாணவிகளை வலுக்கட்டாயமாக தன் அறைக்குள்  அழைத்து அவர்களை மிரட்டி தன்னுடன் நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2021, 06:15 PM IST
குடிபோதையில் மாணவர்களை தன்னுடன் நடனமாட வற்புறுத்திய தலைமை ஆசிரியர்! title=

தமோ : பள்ளிக்குள் போதையில் நுழைந்த தலைமையாசிரியர் ஒருவர் சில மாணவிகளை வலுக்கட்டாயமாக தன் அறைக்குள்  அழைத்து அவர்களை மிரட்டி தன்னுடன் நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள மதியோடா கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் தான் ராஜேஷ் முண்டா. 

ALSO READ கருப்பாக மாறிய 'கமாங்க் ஆறு': செத்து மிதக்கும் மீன்கள்! காரணம் என்ன?

இவர் கடந்த 29-ம் தேதியன்று பள்ளிக்குள் அதிகளவில் மது அருந்தி விட்டு போதையில் வந்துள்ளார். போதை தலைக்கேறியிருந்த அவர், வகுப்பறையில் இருந்த சில மாணவிகளை தன் அறைக்கு அழைத்து இருக்கிறார். ஆசிரியர் அழைத்ததால் மாணவிகளும் மறுப்பு சொல்லாமல் சென்றுள்ளனர்.  மாணவிகள் அவரது அறைக்கு சென்றதும் குடி போதையில் இருந்த அந்த வக்ர புத்தி கொண்ட ஆசிரியர் நடனமாடி உள்ளார்.மேலும் அழைத்து வந்த அந்த மாணவிகளையும் தன்னுடன் சேர்ந்து ஆடச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.   அதுமட்டுமல்லாது நடனமாடுவதை வீடியோ எடுத்து தனது போனில் ராஜேஷ் முண்டா பதிவு செய்துள்ளார். நடனமாட சொன்னபோதே அதிர்ச்சி அடைந்த மாணவிகள். இவர் வீடியோ எடுப்பதை கண்டு மேலும் மாணவிகள் அதிர்ச்சியுற்றனர். 

பின்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர் நடந்து கொண்டதைப் பற்றி கூறினார். மாணவிகளில் இந்த புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர்.  பெற்றோர்களின் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது பின்னர் ஆய்வுசெய்த மாவட்ட கல்வி அதிகாரி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவை பிறப்பித்தார்.  மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய பள்ளியில் தலைமை ஆசிரியரின் இவ்வாறு வரம்பு மீறி செய்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News