ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த கொலைகளுக்கு பின்னால் பாகிஸ்தான் உள்ளது அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் பெரிய சதி அம்பலமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெருவோர விற்பனையாளரின் கொலை, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தச்சரின் கொலை, காஷ்மீர் பண்டிட் மற்றும் பிரபலமான வேதியியலாளர் கொலை, ஒரு பெண் பள்ளி முதல்வர் கொலை, ஒரு பொது பள்ளி ஆசிரியர் கொலை மற்றும் வீட்டுக்குள் புகுந்து இருவர் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டது, ஆகிய சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் செயல்படும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.


இந்த கொலைகள் ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நடக்கும் கொடூரங்களை நினைவூட்டுகின்றன, அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில், இஸ்லாமிய சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை தலிபான்கள் கொல்கின்றனர். இதே போன்ற சூழ்நிலைகள் காஷ்மீரிலும் உருவாக்கப்படுகின்றன.


ALSO READ | ISI பெரிய சதி, இராணுவப் பகுதிகள் மற்றும் RSS தலைவர்களுக்கு குறி


ISI டூல் கிட்டில் இருந்து பல விஷயம் அம்பலம்


காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளது என்பதற்காக டூல் கிட் விபரங்கள் ஜீ நியூஸுக்கு கிடைத்துள்ளது. இதில் காஷ்மீர் காபூலாக மாற்றுவதற்கான திட்டம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது


முசாபராபாத்தில் ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாதிகள் சந்திப்பு


இந்தியாவில் பீதியை பரப்ப ஐஎஸ் ஐ தீட்டிய திட்டம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கிடையே சமீபத்தில் முசாபராபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், இந்தியா மற்றும் ஜம்மு -காஷ்மீரை எப்படி சீரழிக்கலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. காஷ்மீருக்கான ஆப்கானிஸ்தான் தொகுதியில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ செயல்படுவதாக உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து ஜீ நியூஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. 


ALSO READ | JK: பயங்கரவாதிகளின் வெறியாட்டம்; இரு வியாபாரிகள் படுகொலை


ஐஎஸ்ஐயின் திட்டத்தின்படி, மற்ற மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு வந்தவர்கள், அதிகாரிகளாகபணியில் உள்ளவர்கள் அல்லது பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் வேலை செய்து வருபவர்கள், 1990 களில் இடம்பெயர்ந்த ஆனால் மீண்டும் காஷ்மீருக்குத் திரும்ப விரும்பும் அத்தகைய காஷ்மீர் பண்டிதர்கள் ஆகியோரை இலக்கு வைத்து தாக்கும் திட்டம்அதில் அடங்கும். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், காவல் துறைக்காக வேலை செய்யும் நபர்கள் குறிவைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 


இது தவிர, பாதுகாப்புப் படைகளை ஆதரிக்கும் காஷ்மீரிகள் தாக்கவும், பாலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற அரசு சொத்துக்கள் சேதப்படுத்துவது,  கல்வி நிறுவனங்களை சேர்தவர்களை தாக்குவதும் இந்த சதியின் ஒரு பகுதியாகும்.


அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டுப் போட்டிகள் புறக்கணிக்கவும், நாட்டின் நலனுக்காக செய்திகளைக் காட்டும்  ஊடக நிறுவனங்களை புறக்கணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது  என்று டூல் கிட்டில் எழுதப்பட்டுள்ளது. அரசு தொடங்கிய புதிய திட்டத்தின் கீழ் பள்ளத்தாக்கு திரும்பும் காஷ்மீர் பண்டிதர்கள் தாக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பயங்கரவாத அமைப்புகளால் காஷ்மீரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஜீரணிக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது.


ALSO READ | சிங்கு எல்லை படுகொலை; நிஹாங் சீக்கிய அமைப்பின் உறுப்பினருக்கு நீதிமன்ற காவல்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR