சீனா, ரஷ்யா& பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்... !!!

சார்க் மாநாட்டில் தலிபான்களை பங்கேற்க செய்யும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா முறியடித்த பின், சர்வதேச அரங்கில் தலிபான்கள் இடம் பெற  செய்ய என பாகிஸ்தான் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 23, 2021, 11:34 AM IST
  • சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் சிறப்பு தூதர்களை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியது.
  • காபூலில் தலிபான் தலைவர்களை தூதர்கள் சந்தித்தனர்.
  • தலிபான்களை சர்வதேச தளத்திற்கு கொண்டு வர முயற்சி.
சீனா, ரஷ்யா& பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்... !!!

காபூல்: சர்வதேச அரங்கில் தலிபான்கள் (Taliban) இடம் பெறுவதற்கான பாகிஸ்தான் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர்கள் திடீரென ஆப்கானிஸ்தானை அடைந்து தலிபான் தலைவர்களை சந்தித்துள்ளனர். இந்த சம்வவம் உலக அரங்கில் பெரிதும் கவனிக்கப்படுகிறது. செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் காபூலுக்கு வந்த சிறப்பு தூதர்கள் ஆப்கானிஸ்தானின் தற்காலிக பிரதமர் முஹம்மது ஹசன் அகுந்த், வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முதாகி, நிதி அமைச்சர் மற்றும் உயர் மட்ட அரசு அதிகாரிகளுடன் பேசினார்கள் என கூறப்படுகிறது.

சார்க் (SAARC) மாநாட்டில் தலிபான்களை  பங்கேற்க செய்யும் முயற்சியை பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா முறியடித்த நேரத்தில் மூன்று நாடுகளும் இந்த சந்திப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. ஐநாவில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த அதன் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீனை ஐநா பிரதிநிதியாக ஆக்க வேண்டும் என  ஐநா  தலைமை செயலர் அன்டோனியோ குடெரெஸுக்கு தாலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச அரங்கில் தலிபான்கள் இடம் பெற மூன்று நாடுகள் சில திட்டங்களைத் தயாரித்து வருவதாக நம்பப்படுகிறது.

ALSO READ | ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்; சாதி பிரச்சனை தான் காரணமா..!!!

தாலிபான்கள் சந்திப்பு குறித்து சீனா தகவல் அளித்துள்ளது. தலிபான்களின் இடைக்கால அரசு மற்றும் முன்னாள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian) கூறினார். சிறப்புத் தூதுவர்கள் முன்னாள் ஆப்கானிஸ்தான் (Afghanistan) அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லாவையும் சந்தித்தனர். தாலிபான் ஆட்சியில் ஒரு வெளிநாட்டு இராஜதந்திரி காபூலுக்குச் சென்று அங்கு வசிக்கும் ஹமீத் கர்சாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோருடன் சந்திப்பு நடத்தியது இதுவே முதல் முறை  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | காஷ்மீர் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை: தாலிபான்கள் அடித்த ‘அந்தர் பல்டி’

சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில், சர்வதேச மன்றங்களில் தலிபான்கள் நுழைவதற்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சார்க் நாடுகளின் கூட்டத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரும்பினார். ஆனால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அதை எதிர்த்தன. பின்னர் ஒருமித்த கருத்து இல்லாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சீனா மற்றும் ரஷ்யாவை ஒன்றிணைப்பதன் மூலம் இப்போது பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவாக தனது  நடவடிக்கையை தீவிரப்படுத்து வருகிறது. 

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News