JK: பயங்கரவாதிகளின் வெறியாட்டம்; இரு வியாபாரிகள் படுகொலை

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 30 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2021, 08:04 AM IST
  • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறியாட்டம்
  • இந்த ஆண்டில் இதுவரை 30 பொதுமக்கள் படுகொலை
  • கடந்த இரு வாரங்களில் எட்டாவது முறையாக பொதுமக்கள் மீது தாக்குதல்
JK: பயங்கரவாதிகளின் வெறியாட்டம்; இரு வியாபாரிகள் படுகொலை title=

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வெறியாட்டம் தொடர்கிறது. உள்ளூர் அல்லாதவர்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்கிறது.

சனிக்கிழமையன்று பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த படுகொலைக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு நிகழ்வில் புல்வாமாவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த இரண்டு வாரங்களில் பள்ளத்தாக்கில் பொதுமக்கள் படுகொலை செய்வது இது எட்டாவது முறையாகும்.

அர்பிந்த் குமார் சாஹ் என்ற வெளி மாநிலத்தவர் ஒருவரை, ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் பயங்கரவாதிகள் கொன்றனர்.   புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த தொழிலாளி சாகிர் அகமதுவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சாஹ் கோல்கப்பா விற்று வாழ்க்கை நடத்திவந்தவர். பனையாளர், புல்வாமாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சஹரன்பூரைச் சேர்ந்த சாகிர் தச்சராக பணிபுரிந்து வந்தார்.

இந்த தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

"அரவிந்த் குமார் ஷா மற்றும் சாகிர் அகமது பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் இந்த கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். பயங்கரவாதிகளையும் அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பையும் ஒடுக்குவதற்கான முயற்சிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். அப்பாவி பொதுமக்களை கொன்றதற்கு அவர்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று  துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.   

ALSO READ | தடுப்பூசி உற்பத்தி-விநியோகத்தில் இந்தியா அபாரம் - உலக வங்கி பாராட்டு

பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் எட்டு பொதுமக்களைக் கொன்றனர். செப்டம்பரில், பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி குல்காமின் நெஹாமா பகுதியில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். பீகாரைச் சேர்ந்த மற்றுமொரு சிறு வியாபாரி அக்டோபர் 5 அன்று ஸ்ரீநகரில் கொலை செய்யப்பட்டார், கடந்த வாரம், ஸ்ரீநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குள் ஒரு பெண் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீரி பண்டிட் மற்றும் ஸ்ரீநகரின் புகழ்பெற்ற மருந்தகத்தின் உரிமையாளர் மகான் லால் பிந்து என்பவரும் தீவிரவதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'சாட்' விற்பனையாளர், பீகாரைச் சேர்ந்த வீரேந்திர பாஸ்வான் மற்றும் முகமது ஷாஃபி லோன் ஆகியோரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். 

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 30 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

ALSO READ | கேரள கனமழை நடத்தும் கோரதாண்டவம்.... 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News