#ISRO விண்ணில் ஏவப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோள் தோல்வி
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று இரவு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சரியான பாதையில் நிறுத்த முடியாமல் தோல்வி அடைந்தது என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று 2 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 19 நி.மி., 45 நொடிகளில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தம் என இஸ்ரோ தெரிவித்தது.
பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் 44.4 மீ உயரம் கொண்டது. பிஎஸ்எல்வி சி39 ராக்கெட்டில் 1425 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்படுகிறது.
தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 284 கி.மீ., தொலைவிலும், அதிகபட்சமாக 20,657 கி.மீ., தொலைவிலும் நிலை நிறுத்தப்படவுள்ளது.
2013-ம் ஆண்டு முதலில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ செயற்கைக்கோளின் ஆயுள் காலம் முடிவடைவதால் புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுகிறது.
இந்த செயற்கைக்கோள் 425 கிலோ எடைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 58 மீட்டர் சுற்றளவு கொண்டது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசை செயற்கைக்கோள்களை சுருக்கமாக நேவிக் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கி.மீ., சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிகாட்டியாக இந்த செயற்கைக்கோள்கள் தமது பணியை மேற்கொள்ளவுள்ளது.