புது டெல்லி: நண்பரின் தொலைபேசியைப் பயன்படுத்தி டெல்லி மகளிர் ஆணையத்தின் உதவியைப் பெற்று 20 வயது சிறுமி ஆணவக்கொலையில் (honour killing) இருந்து தப்பி உள்ளார். தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனக்கு விருப்பமான ஒருவரை திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணை, கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் உறவினர்கள் கடத்தி வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனக்கு ஆபத்து என உணர்ந்த அந்த பெண்,"டெல்லி மகளிர் ஆணையத்தின் (Delhi Commission for Women) ட்விட்டரைப் பயன்படுத்தி உள்ளார். அதில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது பெற்றோர் அவரைக் கொல்ல சதி செய்து வருவதாகவும் தெரிவித்தார். 


அதற்கு டெல்லி மகளிர் ஆணையத்தின் சார்பில், அந்த பெண்ணிடம், உங்களை எப்படி தொடர்பு கொள்வது எனக் கேட்டபோது, ​​அவரது தந்தை தனது தொலைபேசியைக் கைப்பற்றி உள்ளதாகவும், அவர் தனது குடும்பத்தினரிடமிருந்து தப்பித்து தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


ALSO READ |  ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்


பயந்துபோன பெண் தனது இருப்பிடத்தை வெளிப்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்று DCW அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு ஆலோசனை மற்றும் ஆறுதல் வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் DCW அலுவலகத்தை அடையும்படி கேட்டுக்கொண்டதும், அந்த பெண் வருவதற்கு பயந்துள்ளார். அதற்கு காரணம், திருமணத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் அதைப் பற்றி கமிஷன் அதிகாரிகளிடம் பேச வீட்டிற்கு அழைத்தனர். ஆனால் அவர் வீட்டிற்கு வந்ததும் தாக்கப்பட்டு தாத்ரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அங்கிருந்து எப்படியோ தப்பித்துள்ளார். அவரது கணவர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். இரண்டு-மூன்று நாட்கள் தனக்கு நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளார். அவரது உறவினர்கள் வீட்டுக்கு செல்லவில்லை. 


தற்போது அந்த பெண் பாதுகாப்பாக ஒரு வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார், மேலும் டி.சி.டபிள்யூ அதிகாரிகள் இந்த விஷயத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்துள்ளனர். சிறுமி மற்றும் அவரது கணவரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ஆணையம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 


ALSO READ |  பெற்ற மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை: கேரளாவில் பரபரப்பு!


DCW இன் சட்ட உதவியுடன், அவர் இப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) அதன் பாதுகாப்பைக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுமியின் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் வியாழக்கிழமை டி.சி.டபிள்யூ அலுவலகத்தில் கூடி, போராட்டம் நடத்தியுள்ளனர். இதுக்குறித்து டெல்லி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


டி.சி.டபிள்யூ தலைவர் சுவாதி மாலிவால் (Swati Maliwal) கூறுகையில், "இந்த நாட்டில் "ஆணவக்கொலை" இன்னும் உள்ளது என்பது வெட்கக்கேடானது. கமிஷனின் குழு நிலைமையை அமைதியாகக் கையாண்டதால் அந்த பெண்ணை மீட்க முடிந்தது" என்று மாலிவால் கூறினார்.