லடாக்: இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை (Independence Day) லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ITBP படையினர் மூவர்ணக் கொடிகளை எடுத்துச் சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ITBP இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை அதன் வீரர்கள் பாடிய பிரபலமான தேசபக்தி பாடல்களின் மாஷப் வெளியிடப்பட்டது.


இந்த ஆண்டு, கிழக்கு லடாக்கில் (Ladakh) சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதல்களின் போது அசாத்திய துணிச்சலைக் காட்டியதற்காக 294 ITBP வீரர்களுக்கு இயக்குநர் ஜெனரல் (DG) பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.


லடாக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா சீனா இடையே எல்லை மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், சீன துருப்புக்களை எதிர்த்து அவர்களது நடமாட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கு ITBP இராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து போராடி வருகிறது. இதற்காக தன்னுடைய துணிச்சல் மிக்க 21 வீரர்களின் பெயர்களை ITBP சாகச பதக்கங்களுக்காக பரிந்துரைத்தது.


சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணிச்சலோடு ஈடுபட்டதற்காக டி.ஜி. பதக்கங்கள் 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று ITBP தெரிவித்தது. COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் காட்டப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக


358 ITBP வீரர்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை பதக்கங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.


ALSO READ: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்: பிரதமர் மோடி பெருமிதம்..!


ஜூலை 5 ஆம் தேதி திறக்கப்பட்ட டெல்லியின் சத்தர்பூரில் உள்ள ராதா சோமி பியாஸில் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ வசதி மையமான 10,000 படுக்கைகள் கொண்ட COVID-19 சர்தார் படேல் மருத்துவமனையை ITBP வீரர்கள் இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கிரேட்டர் நொய்டாவில் மத்திய ஆயுத போலீஸ் படைகள் பரிந்துரை மருத்துவமனையை நடத்துவதோடு, ஜனவரி மாதம் டெல்லியின் சாவ்லா பகுதியில் முதல் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் வசதியையும் ITBP அமைத்து நடத்தி வருகிறது.


சுமார் 90,000 படை வீரர்களைக் கொண்ட ITBP-யின் முதன்மைப் பணி 3,488 கி.மீ நீளமுள்ள LAC-ஐ பாதுகப்பதாகும். இந்த எல்லைப் பகுதி லடாக்கில் உள்ள காரகோரம் பாஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தின் ஜாச்செப் லா வரை விரிந்து பரந்து இருக்கும் ஒரு எல்லைப் பகுதியாகும்.


ALSO READ: சுதந்திர தின சிறப்பு: 74-வது சுதந்திர தினத்தில் கால் தடம் பதித்த இந்தியா!