விவசாயிகளுக்கு ஜாக்பாட், இந்த முறை 6000 இல்லை முழு 11000 ரூபாய் கிடைக்கும்
PM Kisan 14th Installment: க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா என்பது ஜார்கண்ட் அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டமாகும், இதில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
க்ரிஷி ஆசிர்வாத் யோஜனா: விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களின் நோக்கம் விவசாயிகளை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதாகும். எனவே நீங்களும் பிரதமர் கிசான் யோஜனாவைப் பயன்படுத்தி கொண்டு இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். சில வருடங்களால் பிரதமர் கிசான் நிதி திட்டம் விவசாயிகளுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோல், க்ரிஷி ஆஷிர்வாட் யோஜனா ஜார்கண்ட் அரசால் நடத்தப்படுகிறது. இதன் கீழ் விவசாயிகளுக்கு ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படுறது.
க்ரிஷி ஆஷிர்வாட் யோஜனா
இந்த நிலையில் ஜார்கண்ட் அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த திட்டத்தின் பெயர் க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா ஆகும். இதில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5000 நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி உதவி காரீஃப் பருவ சாகுபடிக்கு முன் வழங்கப்படுகிறது. 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.25,000 மானியமாக பெறலாம். மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.11,000 மற்றும் அதிகபட்சமாக ரூ.31,000 வரை பலன் பெறுவார்கள்.
மேலும் படிக்க | Coronavirus: மீண்டும் வேகம் காட்டும் கோவிட்! 5 மாநிலங்களில் அதிகரித்தது அச்சம்
ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலம் இருந்தால், காரீஃப் பருவ அறுவடைக்கு முன் 5000 ரூபாய் அரசால் மானியமாக வழங்கப்படும். இதனிடையே அந்த விவசாயி பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.6000 பலனைப் பெற்று வந்தால், மொத்தமாக ரூ.11,000 வழங்கப்படும். அதேபோல், 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ள விவசாயிக்கு ரூ.25,000 கொடுக்கப்படும், அதன்படி பிஎம் கிசான் திட்டம் சேர்த்து மொத்தம் ரூ.31,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- அரசின் இத்திட்டத்தின் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 லட்சத்து 47 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
- ஜார்கண்டின் சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனாவைப் பயன்படுத்திக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
- 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலத்தில் பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் வழங்கப்படும்.
மேலும் படிக்க | ஜாக்பாட்! இனி அரிசி இலவசம்..அதுவும் இவ்வளவு கிலோவா? அசத்தும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ