புதுடெல்லி: உணவுகங்கள், மல்டிபிளக்ஸ் போன்றவைகளில் விற்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்கள், பட்டியலிடப்பட்ட சில்லறை விற்பனை விலைக்கு (MRP) மேல் விற்கப்பட்டால் அபராதத் தொகையை வசூலிக்கப்படும் என உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹோட்டல் மற்றும் ரெஸ்டோரன்ட் கூட்டமைப்பு (FHRAI) பிரபித்த மனவின் மீதான விசாரணையின் பேரில், உச்சநீதி மன்றத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


மினரல் வாட்டர் பாட்டில்களில் குறிப்பிட் விலை பதியப்பட்டிருந்தாலும் பொதுவாக விற்பனையாளர்கள் அந்த விலைக்கு அதிகமான விலையிலேயே பாட்டிலினை விற்கின்றனர். 


இந்த செயல்பாடுகளால், அரசாங்கத்திற்கு நியாயமாக வரவேண்டிய சேவை வரி மற்றும் எக்ஸ்சைஸ் கடமை வரிகளின் வடிவ கூடுதல் வருவாய் இழக்க வாய்ப்புகள் உள்ளது என அரசு அறிவித்துள்ளது.


முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்,  MRP(அதிகபட்ச சில்லறை விலை)-க்கு மேல் விமான நிலையங்கள், மல்டிப்ளக்ஸ் மற்றும் ஹோட்டல்களில் உள்ளிட்ட நிலையங்களில் பேக்கேஜிங் நீர் மற்றும் மென்மையான பானங்களின் அதிக விலை விற்பனை கடுமையான தண்டனைக்குரியது, அத்துமீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் மற்றும் சிறை தண்டனையும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.





"ஆனால் இன்னும் விமான நிலையங்கள், மல்டிப்ளக்ஸ் மற்றும் ஹோட்டல்களில் அதிக விலை விற்பனைகளை பார்க்கிறோம், இது கண்டத்திற்குறியது, விரைவில் நிறுத்தப்பட வேண்டும்," என  பாஸ்வான் தெரிவித்துள்ளார்.