காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த 77 வயதுடைய ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ஐதராபாத் நகரில் கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு மனைவியும், இரட்டையர்களான மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


கடந்த 1942 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார்.  இதன்பின் அரசியலில் நுழைந்து 1970 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வானார். ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரியாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவியையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.