சீனாவிடம் தோற்கவில்லை. கனடா மூக்கை நுழைத்தது. பாகிஸ்தான் கொள்கை பயங்கரவாதம் -ஜெய்சங்கர்
External Affairs Minister S Jaishankar: அண்டை நாட்டுடனான உறவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதை குறித்து பார்ப்போம்.
India News In Tamil: பாகிஸ்தான் மீது எஸ் ஜெய்சங்கர்: இந்தியாவை பேச்சுவார்த்தை வட்டத்துக்குள் கொண்டு வர பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை நாடி வருகிறது என்றும், பாகிஸ்தானின் முக்கிய கொள்கை பயங்கரவாதம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை, ஜனவரி 2) செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அடிக்கடி எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு தவறான நோக்கங்களுக்காக அனுப்புகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியது,
பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வைத்து இந்தியாவை பேச்சுவார்த்தை அழைக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை தனது முக்கிய கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் இத்தகைய விளையாட்டை நாம் விளையாடாமல், அதனை பொருத்தமற்றதாக ஆக்கிவிட்டோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
அண்டை நாடுகளுடன் பழக மாட்டோம் என்பதல்ல. ஆனால் அவர்கள் (பாகிஸ்தான்) முன்வைக்கும் பயங்கரவாத அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அப்படி பேச்சுவார்த்தை நடத்தினால் பயங்கரவாத செயல்கள் சட்டபூர்வமானதாகவும், இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதில் பயங்கரவாதம் பயனுள்ளதாக இருப்பதாகக் கருதப்படும் என்றார்.
கனடா அரசியலில் காலிஸ்தான் படைகளுக்கு அதிக முக்கியத்துவம்: ஜெய்சங்கர்
கனடாவில் காலிஸ்தானி நடவடிக்கைகள் பரவுவது குறித்து பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக உறவுகளுக்கு இடையே விரிச்சல் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட காலிஸ்தான் படைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றார். 'கனடா நாட்டு அரசியலில் காலிஸ்தான் படைகளுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டிருப்பது முக்கிய பிரச்சினை. மேலும் இருநாட்டு உறவுகளுக்கு இடையே தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவிற்கும் பயன் இல்லை, கனடாவுக்கும் பயண இல்லை என்று தான் நினைப்பதாகக் கூறினார்.
சீனாவின் ஆக்கிரமிப்பை சமாளிக்க அணுகுமுறையை மாற்ற வேண்டும்: ஜெய்சங்கர்
பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் சீனாவுடன் இந்தியா உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று எஸ்.ஜெய்சங்கர் கூறினார். சீனாவின் 'மைன்ட் கேம்'களில் இந்தியா தோற்றுவிட்டதா என்று அவரிடம் கேட்டபோது. இதுகுறித்து அவர் கூறுகையில், 'நாங்கள் தோற்றுவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இன்று நாம் கடந்த காலத்தின் சில பகுதிகளைப் பற்றி பேசும்போது வெவ்வேறு நேரங்களில் அவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்றார். அதேநேரத்தில் சீனா தொடர்பாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு வந்த கொள்கைகளையும் அவர் விமர்சித்தார்.
மேலும் படிக்க - கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா! இந்தியா எடுத்த முக்கிய முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ