புதுடெல்லி: நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். வீடுகள்தோறும் குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு சுதந்திரம் அடைந்த ஏழுபது ஆண்டுகளில் நாட்டின் மூன்று கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி செய்யப்பட்டிருந்தது என்றும், 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடைந்தற்கு காரணம் 'ஜல் ஜீவன் மிஷன்' என பிரதமர் மோடி பாராட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 3 ஆண்டுகளில் தனது அரசு ஏழு கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சாதாரண சாதனையல்ல, இதற்கு முன்னதாக, 1947 முதல் 70 ஆண்டுகளுக்கு நாட்டின் மூன்று கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்தது’’ என்று காங்கிரஸை மறைமுகமாகத் தாக்கி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 


நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் நாட்டின் நிகழ்காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர் கூறினார், 



"ஜல் ஜீவன் மிஷன்" திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் தண்ணீர் வழங்குவதற்கான பிரச்சாரம் "பெரிய வெற்றி" என்றும் அனைவரின் முயற்சிகளுக்கும் "சிறந்த உதாரணம்" என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்,


மேலும் படிக்க | Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ


"அரசாங்கத்தை அமைப்பது" என்பதற்காக கடினமாக உழைக்க வேண்டியதில்லை, ஆனால் நாட்டை கட்டியெழுப்ப கடினமாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.


ஜல் ஜீவன் மிஷனின் கீழ், அனைத்து வீட்டிற்கும் குழாய் தண்ணீரை வழங்கும் நாட்டின் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டினார்.


காணொலி காட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட "ஹர் கர் ஜல் உத்சவ்" நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை தனது அரசாங்கம் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். 


மேலும் படிக்க | நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யலாம்: ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு


21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக நீர் பாதுகாப்பு கருதப்படும் என்று கூறிய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவின் பாதையில் தண்ணீர் பற்றாக்குறை பெரும் தடையாக அமையும், எனவே சேவை உணர்வுடனும் கடமையுடனும் 24 மணி நேரமும் உழைக்க வேண்டும் என்று கவலை தெரிவித்தார்.


“கடந்த 8 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன் நீர் பாதுகாப்புப் பணிகளை முடிப்பதில் அரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை நாங்கள் தொடர்ந்து தீர்த்து வருகிறோம் என்றார்.



”ஜல் ஜீவன் மிஷனின் வெற்றியின் நான்கு வலுவான தூண்களாக மக்கள் பங்கேற்பு, பங்குதாரர் கூட்டாண்மை, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை விவரித்த மோடி, செங்கோட்டையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டது இன்று நனவாகி இருப்பதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | அர்விந்த் கேஜ்ரிவாலை ஒழிக்க நினைக்கிறதா பாஜக? சிபிஐ ரெய்ட் ஏன்? ஆம் ஆத்மி கேள்வி


ஜல் ஜீவன் மிஷன் என்பது இந்திய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாகும், இது 2019 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையின் கோட்டையிலிருந்து பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும், வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட தரமான குடிநீரை போதுமான அளவில் வழங்குவது இதன் நோக்கமாகும்.


இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  


மேலும் படிக்க | பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ