Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

DGCA Decision on Boeing B737 Pilot Issue: எச்சரிக்கையை அலட்சியம் செய்த போயிங் பி737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2022, 09:48 AM IST
  • எச்சரிக்கையை அலட்சியம் செய்த விமானி
  • போயிங் பி737 விமான விமானியின் உரிமம் ரத்து
  • விமான ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ
Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ title=

நியூடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் விமானியின் உரிமத்தை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ளது என்று வட்டாரங்கள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. மே மாதம் முதல் தேதியன்று  SG-945 என்ற போயிங் B737 விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்தபோது, மேகங்களை தவிர்த்து விமானத்தை பறக்கச் செய்யலாம் என்றும், மேகங்களின் வழியாக பறக்க வேண்டாம் என்றும், தலைமை விமானியிடம், துணை விமானி கேட்டுக் கொண்டார், ஆனால் அதை கேப்டன் விமானி புறக்கணித்தார்.

மும்பையிலிருந்து துர்காபூருக்கு SG-945 என்ற போயிங் B737 விமானம் இயக்கப்படும் விமானம், இறங்கும் போது கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டது, இதன் விளைவாக ஒரு சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் நான்கு கேபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 195 பேர் இருந்தனர். மும்பையில் இருந்து மாலை 5.13 மணியளவில் விமானம் புறப்பட்டது.

மேலும் படிக்க | ஜெட் எரிபொருள் விலை உயர்வு; இனி விமானப் பயண கட்டணமும் உயரும்

விமானம் தரை இறங்கும் போது, ​​கடுமையாக குலுங்கியது. மேலும், செங்குத்து சுமை காரணி +2.64G மற்றும் - 1.36G வரை மாறுபட்டது. இந்த காலகட்டத்தில் தன்னியக்க பைலட் இரண்டு நிமிடங்களுக்கு செயலிழந்துவிட்டது மற்றும் பணியாளர்கள் விமானத்தை இயக்க நேர்ந்தது என்று டிஜிசிஏ தெரிவித்தது.

மே 2 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக இவ்வாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பான விசாரணைக்கு பிறகு, விமான கேப்டனின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யும் முடிவு இன்று தான் உறுதிபடுத்தப்பட்டது.

மேலும் படிக்க | டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News