புதுடெல்லி / ஸ்ரீநகர்: 370வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர், காஷ்மீரில் மாற்றத்திற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்போது மெட்ரோ கனவு காஷ்மீரிலும் நனவாக உள்ளது. மேலும் இந்த மெட்ரோ இயங்கும் டெல்லி-மும்பை போன்ற பெருநகரங்களுடன் சேர்க்கப்படும். இதற்கான பணிகளை மேற்கொள்ள ஸ்ரீநகரில் மெட்ரோவில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாராக உள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீநகர் மெட்ரோ நிர்வாகம் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. 


முதலில் ஸ்ரீநகரில் 25 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கட்டுமான பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும். ஸ்ரீநகர் மெட்ரோ இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை காரிடார் -1 மற்றும் காரிடார் -2 என பெயரிடப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் 12 நிலையங்கள் கட்டப்படும். அதாவது, இரண்டு பகுதிகளும் சேர்த்து மொத்தம் 24 நிலையங்களுடன் மெட்ரோ திட்டம் மேற்கொள்ளப்படும். இந்த மெட்ரோ திட்டத்திற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். ஸ்ரீநகர் மெட்ரோ திட்டத்தின் தலைவராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.