மிதக்கும் திரையரங்கம்! அசத்தும் சுற்றுலாத்துறை!
இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களுள் ஒன்றாக ஜம்மு - காஷ்மீர் திகழ்கிறது
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் ஆகும் . கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிகவும் அழகான மற்றும் மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு, 'புவியின் சொர்க்கம்' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தை சார்ந்த பயணிகளை ஈர்த்து வருகிறது.
இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களுள் ஒன்றாக ஜம்மு - காஷ்மீர் திகழ்கிறது. இங்கு ஹைலைட் ஆன பகுதி எதுவென்றால் அது 'டால் ஏரி' தான். இந்த நகரத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் இந்த ஏரியின் அழகை ரசிக்காமல் சென்றிருக்க முடியாது .அதிலும் குறிப்பாக பனிப்பொழிவின் போது டால் ஏரி உறைந்துவிடுமாம் ,அந்த சமயத்தில் தான் இந்த பகுதி களைக்கட்டும். ஒவ்வொரு சுற்றுலா தளங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது .அந்த வகையில் ஜம்மு -காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியான 'டால் ஏரி'யில் அட்டகாசமான புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 'டால் ஏரி'யில் வித்தியாசமான வகையில் மிதக்கும் திரையரங்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே முதல்முறையாக காஷ்மீரில் தான் சுற்றுலாத்துறையால் மிதக்கும் திரையரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த மிதக்கும் திரையரங்கத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மேலும் உள்ளூர் கலைஞர்கள் காஷ்மீரி பாடல்களை பாடியும், நடனமாடியும் கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை கவர்ந்தனர்.
மேலும் இந்த திரையரங்கில், 1964-ம் ஆண்டு வெளியான, “காஷ்மீர் கி காளி” என்ற திரைப்படம் முதன் முதலாக திரையிடப்பட்டது . இந்த திரைபடத்தை 'ஷிகாரா' எனும் அலங்காரப் படகில் இருந்து சுற்றுலா பயணிகளும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் மிதந்து கொண்டே உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர். அதனையடுத்து காஷ்மீரில் இயங்கும் படகுகளின் வரலாறு குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது. மேலும் ஏரியில் உள்ள படகுகளில் பழைய படங்கள், காஷ்மீரி கலாசாரம் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை சித்தரிக்கும் பழைய சான்றுகள் போன்றவற்றின் புகைப்படங்களை கேலரி தொகுப்புகளாகவும் வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்பட தொகுப்புகள் அனைவரின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதனை உயர் அதிகாரிகளும், ஊர் மக்களும்,சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலா துறையின் இந்த புதிய முயற்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR