கனமழை காரணமாக இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.


இதையடுத்து, இந்த வருட அமர்நாத் புனித யாத்திரை நேற்று பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து துவங்கியது. இந்த புனித யாத்திரையின், முதல் குழுவை காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகல்காம் மற்றும் பல்தல் பாதைகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பத்தர்களின் நலம் கருதி பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வானிலை மாறி சீராக உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.