காஷ்மீரின் லாதோராவில் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் காலித் என்பவன் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போலீஸ் அதிகாரி எஸ்.பி. வாய்த் பேசுகையில், “காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் படை, சி.ஆர்.பி.எப்., மற்றும் ராணுவம் இணைந்து கூட்டாக நடத்திய ஆப்ரேஷனில் பயங்கரவாதி காலித் கொல்லப்பட்டான், என கூறினார்.


கடந்த 3 வருடங்களாக காலித் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்தது மட்டுமின்றி, பயங்கரவாத பாதைக்கு இளைஞர்களை இழுத்தும் உள்ளான் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான காலித் தலைக்கு ரூ. 7 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. 


லாதோராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்த நிலையில் பாதுகாப்பு  படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு சண்டையில் பயங்கரவாதி காலித் கொல்லப்பட்டான் என போலீஸ் தெரிவித்து உள்ளது.