ஜார்க்கண்ட்: ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு - 10 நாள் கெடு விதித்த ஆளுநர்..!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் இருந்தது. அக்கட்சியின் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்த நிலையில், சட்டவிரோத நில மோசடி வழக்கில் அவரை கைது செய்தது. இதனால் உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அவர், அடுத்த முதலமைச்சர் பொறுப்பை அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சம்பாய் சோரனிடம் ஒப்படைத்தார். அவரது தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினர்.
மேலும் படிக்க | யார் இந்த சம்பை சோரன்? அவர் எப்படி ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவிக்கு தேர்வானார்?
அம்மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் தங்களிடம் 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது. இதனால் ஆளுநர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால், அம்மாநில ஆளுநர் சம்பாய் சோரனை உடனடியாக ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் எம்எல்ஏ குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு இருப்பதால் உடனடியாக ஹைதராபாத் செல்ல சம்பாய் சோரன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.
அவர்கள் விமான நிலையம் சென்றவுடன் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஜார்க்கண்ட் மாநிலத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரன் தலைமையில் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தார். 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுபேற்க உள்ளார். அவரது அமைச்சரவை பட்டியலும் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் அதிருப்தியில் இருப்பவர்களை வளைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை வைத்து அடுத்தகட்ட அரசியல் ஆட்டத்தை ஆட பாஜக திட்டமிட்டிருப்பதால் ஜார்க்கண்ட் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. எந்த நேரத்தில் என்ன டிவிஸ்ட் நடக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீதான நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனை நீட்டிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறது.
மேலும் படிக்க | தொடங்கியது ரிசார்ட் அரசியல்... ஹைதராபாத்திற்கு செல்லும் ஜார்கண்ட் MLAக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ