டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜிகிஷா கோஷ் (28).  இவரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2009-ம் வருடம் மார்ச் 18-ம் தேதி பணி முடித்து அலுவலக வாகனத்தில் வீடு திரும்பினார். டில்லியின் வசந்த் விஹார் பகுதியில், வாகனத்தில் இருந்து இறங்கிய அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். அரியானா மாநிலம் சூரஜ்குந்த் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து 3 நாட்களுக்குப் பின்னர், 21-ம் தேதியன்று கோஷின் சடலத்தை போலீசார் மீட்டெடுத்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர், இது தொடர்பாக அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 3 பேர் மீதும் கொலை, கொள்ளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு டெல்லியில் உள்ள ஷெசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இன்று தீர்ப்பு வழங்க வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 3 பேரில் இருவருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.