ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை தற்போது 100 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கடந்து விட்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் தொலை தொடர்பு ஜாம்பவான் முகேஷ் அம்பானி இலவச டேட்டா மற்றும் ப்ரீ வாய்ஸ் வசதிகளுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜியோ சேவையை அறிமுகப்படுத்தினார். துவக்கத்தில் மூன்று மாத இலவச சேவை வழங்கிய ஜியோ நிறுவனம் பின்னர் இந்த சேவையை 6 மாதங்களுக்கு நீட்டித்தது. ஆனால், இலவச டேட்டாவை அளிப்பை குறைத்தது. முதலில் 4GB அளித்து பின்னர் 1GB என்று குறைத்தது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இந்த இலவச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


முகேஷ் அம்பானியின் இந்த இலவச அறிவிப்பு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக ப்ரீ வாய்ஸ் அழைப்புக்கு வாடிக்கையார்களிடம் இருந்து வரவேற்பும், தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பை கிளப்பியது.


பாரதி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இந்த இலவச சேவையை மேலும் மூன்று மாதங்களுக்கு நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை நீடித்ததை எதிர்த்து நீதிமன்றத்திற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் சென்றன. இதற்கு பதிலடியாக சரியான இன்டர் கனெக்ட் பாயிண்ட்டுகளை இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் கொடுக்கவில்லை என்று ரிலையன்ஸ் குற்றம்சாட்டி இருந்தது. ஜியோ அறிமுகத்தால் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக பாரதி என்டர்பிரைசஸ் தலைவர் சுனில் மிட்டல் குற்றம்சாட்டி இருந்தார்.


இந்நிலையில் ஜியோ மீதான முதலீடு தொடரும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ரூ. 1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யபப்ட்டு இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி இரண்டாவது வாரத்தில் ரூ. 30,000 கோடிக்கான உரிமைப் பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டது. இந்தப் பங்குகளின் மூலம் கிடைக்கும் முதலீடு நிறுவனத்தின் நெட்வொர்க்கை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 



- ஜியோ தொடங்கப்பட்ட 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர் பெற்றுள்ளது.


- ஜியோவில் வினாடிக்கு சராசரியாக 7 வாடிக்கையாளர்கள் சேர்த்துள்ளானர்


- அது இந்தியா மற்றும் இந்தியர்களின் சாதனை ஆகும் 


- இன்று மொபைல் தரவு செய்வதில் உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா தான்.
 
- வரும் மாதங்களில் ஜியோவின் டேட்டா தரவின் கொள்ளளவை இரட்டிப்பாக்கும்


- ஏப்ரல் 1 முதல் ஜியோ கட்டண திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.


- அதில் இன்கம்மிங் & வாய்ஸ் கால்ஸ் மற்றும் ரோமிங் அழைப்பும் எப்போதும் இலவசமாக இருக்கும்