ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!
ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.