J&K-வின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம். ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் (Satya Pal Malik) கோவாவுக்கு மாற்றப்பட்டார்.
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் (Jammu and Kashmir) முதல் லெப்டினன்ட் ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu) நியமிக்கப்பட்டுள்ளார், தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் இடமாற்றம் செய்யப்பட்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் லாடாக்கின் (Ladakh) லெப்டினன்ட் கவர்னராக ராதா கிருஷ்ணா மாத்தூர் (Radha Krishna Mathur) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் 370வது (Article 370) சிறப்பு பிரிவு அந்தஸ்தை மத்திய அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. அதன் பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, அடுத்து சில மாதங்கள் கழித்து இந்த புதிய நியமனங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்பு அங்கு சத்ய பால் மாலிக் ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மிசோரம் (Mizoram) மாநிலத்தின் ஆளுநராக பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், லட்சத்தீவுக்கான பிரபாரியாகவும் இருந்தவர. இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகவும் இருந்தார்.
இந்த மூன்று ஆளுநர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கப்பட்டு உள்ளது.