காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் கொடியுடன் பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியுடனும் இளைஞர்கள் சிலர் வலம் வந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று காலை பக்ரீத் பண்டிகை தொழுகையின் பொது நடைபெற்றுள்ளது. 


அல்கொய்தா தொடர்புடைய போர்க்குணமிக்க குழுவின் தலைவரான Zakir Musa- ன் குறிப்பில், 'MUSA ARMY' என்ற வார்த்தையுடன் கருப்பு பதாகைகளைக் கொண்டுவரும் எதிர்ப்பாளர்களை காட்சிகள் ஒளிபரப்பியன. 



இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கும் இந்த கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட்டது. இதனை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசினர். இதனால், இரு தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.



முன்னர், ஜம்மு-காஷ்மீரில் பாஜக உடன் இணைந்து செயல்பட்ட நபரை வீடு புகுந்து கடத்திச் சென்ற தீவிரவாதிகள், அவரை சுட்டுக்கொலை செய்து உடலை வீசிச் சென்றனர் சம்பவம் குறிப்பிடதக்கது..!