புதுடெல்லி: இந்தியாவில், புதன்கிழமை கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக 507 பேர் இறந்தனர்.  இது நாட்டில் ஒரே நாளில் பதிவிடப்பட்ட மிக அதிக இறப்பு எண்ணிக்கையாகும். ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஜூன் மாதம் கொரோனாவைப் பொறுத்த வரை, இதுவரையிலான கொடூரமான மாதமாக இருந்தது. தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால், சில மாநிலங்கள் வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, லாக்டௌனையும் (Lockdown) மீண்டும் அமல் படுத்த வேண்டி இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கோவிட் -19 (Covid19) காரணமாக ஏற்பட்ட மொத்த 17,4000 மரணங்களில், மகாராஷ்டிரா, டெல்லி (Delhi) மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே 70 சதவீதம் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.


 


Also read: இந்தியாவிற்கு எதிராக கூட்டுச்சதி! PoK-வில் பயங்கரவாதிகளை சந்தித்த PLA அதிகாரிகள்!!


 


புதன்கிழமை காலை 8 மணி வரை வந்த தரவுகளில்,   கடந்த 24 மணி நேரத்தில், 18,653 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றின் மொத்த எண்ணிக்கை அதிகரித்து 5,85,493 ஆகியுள்ளது. அதே நேரத்தில், குணமடைபவர்களின் விகிதம் படிப்படியாக மேம்பட்டு, 60 சதவீதத்தை எட்டியுள்ளது.


அமைச்சக தரவுகளின்படி, தொடர்ந்து ஐந்தாவது நாளாக தினமும் சுமார் 18,000 க்கும் அதிகமான நோயாளிகள் பதிவாகி வருகின்றன. ஜூன் மாதத்தில், நாட்டில் 3,94,958 நோயாளிகள் அதிகரித்தன. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 68 சதவிகிதமாகும். 


2,20,114 கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சையில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 3,47,978 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் 59.43 சதவீத நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


 


Also Read: அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே!!


 


இந்தியாவில் கோவிட் -19 இன் முதல் நோயாளி பற்றி ஜனவரி 30 அன்று தெரியவந்தது. கேரளாவில் சீனாவின் (China) வுஹானில் (Wuhan) இருந்து திரும்பிய ஒரு மாணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் சுகாதார அதிகாரிகள் மார்ச் 12 அன்று கோவிட் -19-ஆல் நடந்த நாட்டின் முதல் மரணத்தை பதிவு செய்தனர்.


நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, மகாராஷ்டிரா (Maharashtra), தமிழ்நாடு (Tamil Nadu), மேற்கு வங்கம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் ஜூன் 30 முதல் வெவ்வேறு கால அவகாசங்களுக்கு லாக்டௌனை நீட்டித்துள்ளன. 


கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படும். இருப்பினும் கல்வி நிறுவனங்கள், மெட்ரோ ரயில் சேவைகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டிருக்கும். அரசியல், கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கான தடை 'அன்லாக் -2' (Unlock2) இல் தொடரும்.