ஹைதராபாத்: இனவெறிக்கு எந்தவித பேதமும் இருப்பதில்லை. உலக புகழ் பெற்ற இந்திய வீராங்கனை, மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை வென்ற ஜ்வாலா கட்டாவையும் இனவெறி (Racism) விட்டு வைக்கவில்லை. அவரும் இனவெறிக்கு பலியானார்,  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜ்வாலா கட்டாவின் பாட்டி அண்மையில் இயற்கை எய்தினார். அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவின் பாட்டியின் மரணம் குறித்து மக்கள் இனரீதியான கருத்துக்களை தெரிவித்தனர். அதையடுத்து ஜ்வாலா கட்டா (Jwala Gutta) உணர்வுபூர்வமான பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.  


இந்தியாவின் (India) முன்னாள் சர்வதேச பூப்பந்து வீராங்கனையின் குடும்பமே இந்த இனவெறி கருத்துக்களால் மிகுந்த வருத்தமடைந்து உள்ளனர். ஜ்வாலாவின் பாட்டி காலமான துக்கம் ஒருபுறம் என்றால், இதுபோன்ற அவதூறுகள் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.  


ஜ்வாலா கட்டா-வின் (Jwala Gutta)  தந்தை கிரந்தி கட்டா தெலுங்கு பேசும் இந்தியர். தாய் யெலன் கட்டா சீனாவைச் சேர்ந்தவர். இது போதாதா இனவெறி கருத்துக்களை பதிவிடுவதற்கு? ஆனால், இனவெறி கருத்துக்கள் குறித்து உணர்ச்சிபூர்வமான பதிவை ஜ்வாலா பகிர்ந்துள்ளார்.



'சீனாவில் (China) காலமான என் பாட்டியின் மறைவில் நான் வருத்தமாய் இருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஏன் கோவிட் என்று சொல்கிறேன், ஏன் சீன வைரஸ் என்று சொல்லவில்லை என்று யோசித்தேன். "நமது சமூகத்திற்கு என்ன நேர்ந்தது! அனுதாபம் எங்கே?" நாம் எங்கே போகிறோம் ... நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது '.
Tweet


முன்னதாக, தன் மீது இனரீதியான கருத்துக்களை தெரிவித்த நபரை அம்பலப்படுத்தினார் ஜ்வாலா குட்டா (Jwala Gutta). அந்த நபர், உங்களுடைய பாட்டி 'கோவிட் காரணமாக இறந்தாரா? அல்லது சீன வைரஸ்' காரணமாக இறந்துவிட்டாரா என்று கேட்டிருந்தார்.



பாட்டியின் மரணம் குறித்து ஜ்வாலா ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை எழுதியுள்ளார். 


தனது பாட்டியின் மறைவை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஜ்வாலா குட்டா, 'சீனாவில் CNY! சந்தர்ப்பத்தில் பாட்டி இறந்துவிட்டார். என் அம்மா ஆண்டிற்கு இரு முறையாவது பாட்டியை நேரில் பார்ப்பது வழக்கம், ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பாட்டியைப் பார்க்க செல்ல முடியவில்லை. நிகழ்காலத்தில் வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த கோவிட் நமக்கு உணர்த்தியது. உங்கள் அன்புக்குரியவர்களுக்காக உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்”.


ALSO READ | இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஃபேஸ்புக் BLOCK செய்த காரணம் என்ன?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR