மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீருக்கு "உரிய" நேரத்தில் மாநில உரிமை வழங்கப்படும் என்று கூறினார். மக்களவையில் 2021 ஆம் ஆண்டின் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்த ஷா, "பல எம்.பி.க்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருவதால் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று கூறி வருகின்றேன். நான் தான் மசோதாவை தயாரித்தேன், நான் கொண்டு வந்தேன். அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளேன்" என்றார்
"ஜம்மு-காஷ்மீருக்கு (Jammu Kashmir) மாநிலம் கிடைக்காது என்று மசோதாவில் எங்கும் எழுதப்படவில்லை. நீங்கள் எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்? நான் இந்த சபையில் கூறியுள்ளேன், இந்த மசோதாவிற்கும் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கு "உரிய" நேரத்தில் மாநில உரிமை வழங்கப்படும், "என்று அவர் கூறினார்.
முன்னதாக திங்களன்று, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் மத்திய பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
ALSO READ | பிரதமர் மோடியின் சென்னை பயணம்; கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் முழு விபரம் ...!!
ஆகஸ்ட் 2019 இல், மத்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்தது. இதை அடுத்த ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கபட்டு, அப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
எதிர் கட்சியை தாக்கி பேசிய அமித்ஷா (Amit Shah), கடந்த 70 ஆண்டுகளில் எதிர்கட்சி என்ன செய்தது எனக் கேட்டார்.
"எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, இந்த மசோதா தொடர்பாக எல்லாவற்றிற்கும் என்னால் விளக்கம் அளிக்க முடியும். ஆனால் தலைமுறைகளாக ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் இது தொடர்பாக பேச தகுதியுள்ளவர்களா என்பதைப் பார்க்க வேண்டும்" என்று உள்துறைஅமைச்சர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) அவசர சட்டம், 2021 ஐ மாற்றுவதற்காக, 2021 ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதாவின் மூலம், ஜம்மு-காஷ்மீர் கேடர் இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய போலீஸ் சேவை (IPS) மற்றும் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரிகளை அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசத்துடன் (AGMUT) இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ALSO READ | போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களை நாள்கணக்கில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: SC
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR