ஹிந்தி ஒரு டையபர் போட்ட குழந்தை.... நாம் தான் அதனையும் வளர்க்க வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சரின் ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘இந்தி மொழியை திணித்தால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட பல மடங்கு பெரிதான போராட்டம் நடைபெறும்’ என்று கூறியிருந்தார். 


இதை தொடர்ந்து நேற்று, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பெட்டகங்களை வழங்கினார். ஒவ்வொரு பெட்டகத்திலும் 96 சானிடரி நாப்கின்கள், 6 பருத்தி உள்ளாடைகள் என ஒரு ஆண்டுக்கான பொருட்கள் வைக்கபட்டிருந்தது. 


இதையடுத்து, மாணவிகள் மத்தியில் பேசிய அவர் கூறுகையில்; ‘இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழி தான். இதை நான் ஏளனமாக கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன். அதற்காக அதை திணிக்கக் கூடாது’ என அவர் தெரிவித்துள்ளார்.