படுகொலை செய்யப்பட்ட இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி மனைவி கிரண் திவாரி இந்து சமாஜ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிரண் திவாரி இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளார். படுகொலை செய்யப்பட்ட கமலேஷ் இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி, லக்னோவில் உள்ள நாகா ஹிந்தோலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக 34 வயதான அஷ்பக் ஷேக் மற்றும் 27 வயதான மொய்னுதீன் பதான் ஆகியோர் பிரதான குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். 



அக்டோபர் 22-ஆம் தேதி குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் இருந்து குஜராத்தின் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) அவர்களை ராஜஸ்தானிலிருந்து குஜராத்துக்குள் நுழைய முயன்றபோது கைது செய்தனர். ஷேக் மற்றும் பதான் சூரத்தில் வசிப்பவர்கள். ஷேக் மருத்துவ பிரதிநிதியாகவும், பதான் உணவு விநியோக சிறுவனாகவும் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது கைதினை தொடர்ந்து இவர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் 72 மணிநேர போக்குவரத்து ரிமாண்ட் வழங்கியதை அடுத்து புதன்கிழமை நள்ளிரவில் இருவரும் லக்னோவிற்கு அழைத்து வரப்பட்டனர்.


முன்னதாக வெள்ளிக்கிழமை, பரேலியைச் சேர்ந்த சையத் கைஃபி அலி என அடையாளம் காணப்பட்ட ஒரு மௌலானா (மதகுரு), இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலையாளிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


மௌலானாவை செவ்வாய்க்கிழமை, நீண்ட விசாரணைக்கு பின்னர் ATS இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 216-ன் கீழ் கைது செய்தது. அக்டோபர் 18-ஆம் தேதி லக்னோவில் திவாரியைக் கொன்ற பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதகுருவை சந்தித்தனர் எனவும் கூறப்படுகிறது.


திவாரி பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தாடைகள் முதல் மார்பு வரை உடலின் மேல் பகுதியில் குறைந்தது 15 முறை குத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. அனைத்து காயங்களும் சுமார் 10 செ.மீ ஆழம் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. கழுத்து புள்ளிகளில் இரண்டு ஆழமான வெட்டு காணப்பட்டன, இந்த அடையாளங்கள் கொலையாளிகள் அவரது தொண்டையை அறுக்க முயன்றதாகக் கூறுகிறது.


இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை திவாரி கொலை குறித்து துப்பு அளிப்பவர்களுக்கு ரூ .15 லட்சம் நிதி மற்றும் திவாரியின் மனைவிக்கு ஒரு வீட்டை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.