மும்பை வீட்டை விற்று ரூ. 3 கோடிக்கு சொகுசு காரை வாங்கிய கங்கனா ரணாவத்!
Kangana Ranaut: பாஜக எம்பி கங்கனா ரனாவத் மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது வீட்டை ரூ. 32 கோடிக்கு விற்று, சமீபத்தில் ஒரு புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள எமர்ஜென்சி படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்து வருகிறது. இதற்கான காரணம் எதுவும் வெளிவராத நிலையில், மும்பை பாலி ஹில்லில் உள்ள தனது பங்களாவை ரூ. 32 கோடிக்கு சமீபத்தில் விற்பனை செய்தார். இந்த பணத்தின் மூலம் ரூ. 3 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை வாங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை லேண்ட் ரோவர் மோட்டார்ஸ் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் அவரது புதிய சொகுசு காருக்கு அருகில் நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டனர். அதில் சல்வார் கமீஸ் வெள்ளை நிற ஆடையை அணிந்தபடி, தனது மருமகன் அஸ்வதாமாவுடன் காணப்பட்டார் கங்கனா.
மேலும் படிக்க | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும் புதிய காருக்கு பூஜை செய்யும் புகைப்படங்களும் அதில் இடம் பெற்று இருந்தது. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி LWB என்று அழைக்கப்படும் இந்த புதிய கார், ஐந்து பேர் பயணிக்கக்கூடிய வசதியுடன் வரும் சொகுசு கார் ஆகும். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.81 கோடி ஆகும். "பாலிவுட் ராணி கங்கனா ரனாவதிற்கு அற்புதமான புதிய ரேஞ்ச் ரோவர் காருக்கு வாழ்த்துகள்!! நீங்கள் வெள்ளித்திரையை ஆள்பவராக இருந்தாலும் சரி அல்லது ஸ்டைலாக ரசிகர்களை வெல்வதாக இருந்தாலும் சரி, எப்படி தயாரிப்பது என்பது உங்களுக்கு எப்போதும் தெரியும். இந்த பவர்ஹவுஸ் ஆடம்பரமாக பயணம் செய்வதற்கும், ஒவ்வொரு பயணத்தையும் உங்களைப் போலவே தைரியமாகவும் அச்சமின்றி செய்யவும் சிறந்தது" என்று லேண்ட் ரோவர் மோட்டார்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் கங்கனா ரனாவத் மும்பையில் உள்ள தனது பங்களாவை ரூ. 32 கோடிக்கு விற்றார். இந்த வீட்டை வாங்கிய மணிகர்னிகா பிலிம்ஸ், தனது பட நிறுவனத்திற்கு அலுவலகமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். கங்கனா நடிப்பில் உருவாகி உள்ள எமர்ஜென்சி படம் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கை வாரியத்தின் அனுமதி கிடைக்காததால், படத்தின் வெளியீடு தாமதமாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கான புதிய தேதி விரைவில் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1975 முதல் 1977 வரை 21 மாதங்கள் இந்தியாவில் எமர்ஜென்ஸி என்னும் மிகக் கடுமையான விதிகளை கொண்டு வந்த பிரபல காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய இப்படம் பேசுகிறது. இப்படத்தில் கங்கனா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திரா காந்தி எமர்ஜென்ஸி விதிகளை கொண்டு வந்த காலம் மிகவும் சிக்கலானது மற்றும் அதைப் பற்றி அதிருப்தி அடைந்த சீக்கியர்களின் சில குழுக்கள் உட்பட பலரைப் பற்றிப் பேச வைத்தது.
மேலும் படிக்க | இந்தியாவில் பரவும் Mpox குரங்கு அம்மை நோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ