குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் கருத்து கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து  வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. 


இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பேரணியில் திமுக தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினர் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். 


இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பங்கா திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய கங்கனா ரனாவத், பேருந்துகள், ரயில்களை எரிப்பதற்கு உரிமை கொடுத்தது யார்? என போராட்டக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு நாம் அடிமைப்பட்டு கிடந்த காலம் இதுவல்ல என்றும் மக்களாட்சி சட்டம் கொண்ட ஜனநாயகத்தில் வன்முறை ஏற்புடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.