குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாக திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த பேரணியில் திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அத்துடன், பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
இதையடுத்து திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை எழும்பூரில் பேரணி செல்லும் பாதை முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Tamil Nadu: Security tightened in Chennai as DMK and its alliance parties are set to hold a 'mega rally' against #CitizenshipAmendmentAct, today in the city. pic.twitter.com/VzdcqxHq5F
— ANI (@ANI) December 23, 2019
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
Tamil Nadu: DMK and its alliance parties hold a 'mega rally' against #CitizenshipAmendmentAct, in Chennai. Congress leader P Chidambaram and MDMK's Vaiko are also participating. pic.twitter.com/ve96fUQ7k7
— ANI (@ANI) December 23, 2019
மேலும் இந்த பேரணியில் திமுக தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினர் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் CAA, NRC-க்கு எதிராக திமுக தலைமையிலான பேரணியில் திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.