புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடந்த ரயில் விபத்து குறித்து இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளிகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்து குறித்து தடயவியல் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்தார்.


இறப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்வு:-


தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கொண்டிருக்கும், மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. 
145 பேர் பலியானத்தில் 123 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட சடலங்களில் 110 சடலங்கள் தகுந்த ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று உத்தரப் பிரதேசம் போலீஸ் பணிப்பாளர் நாயகம் ஜாவீத் அகமது தெரிவித்துள்ளார்.



22 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தது. இதில் சில பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் 200 பேர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 


விபத்து எப்படி நடந்தது?


மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் - பீகார் மாநிலம் பாட்னா இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இந்தூரில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் போபால், ஜான்சி, கான்பூர், லக்னோ, வாரணாசி வழியாக பாட்னா செல்லக்கூடியதாகும். நேற்று அதிகாலை 12.56 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் ஓராய் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்றுவிட்டு அடுத்துள்ள கான்பூருக்கு புறப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ரெயில் கான்பூர் சென்றடைய வேண்டும். ஆனால் கான்பூரை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் புக்ரயான் என்ற இடத்தில் வந்தபோது திடீர் என்று ரெயில் தடம்புரண்டது. 


ரெயில் அப்போது வேகமாக சென்று கொண்டு இருந்ததால் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. எஸ்-1, எஸ்-2, எஸ்-3, எஸ்-4 மற்றும் குளுகுளு 3 அடுக்கு பெட்டி தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கின. அந்தப் பெட்டியில் இருந்த பலர் பலத்த காயமுடன் இறந்தனர். தகவல் கிடைத்ததும் ரெயில்வே மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.