கர்நாடகாவில் உள்ள சன்னி லியோனின் ரசிகர் ஒருவர், சன்னி ரசிகர்களுக்கு தனது கடையில் விற்கப்படும் கோழிக்கறியில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  உங்களை சன்னி லியோனின் ரசிகன் என்று சொல்கிறீர்களா? சரி, நீங்கள் அதை நிரூபிக்க முடிந்தால் உங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என்று கூறியுள்ளார்.  கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு கோழிக்கடையை சேர்ந்த பிரசாத் சன்னி ரசிகர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு தனித்துவமான இந்த வழியைக் கண்டுபிடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | காட்டில் நடந்த கொடூரம்; உடும்பை பலாத்காரம் செய்த 4 பேர் கைது


மாண்டியா நகரில் 100 அடி சாலையில் உள்ள டிகே சிக்கன் சென்டரின் உரிமையாளரான பிரசாத், சன்னி லியோனின் ரசிகர்களை, வந்து நிரூபியுங்கள் என்று தனது கடையின் முன் பலகையை வைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலகை அப்பகுதியில் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது, ரசிகர்கள் மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஆண்டு முழுவதும் 10 சதவீத தள்ளுபடியை பிரசாத் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 


1. சன்னி லியோனை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர வேண்டும்.


2. ஃபோன் கேலரியில் சன்னி லியோனின் படங்கள் குறைந்தபட்சம் 10  இருக்க வேண்டும்.


3. சமூக ஊடகங்களில் சன்னியின் படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்திருக்க வேண்டும்.



பிரசாத் இந்த எல்லா காரணிகளையும் தனிப்பட்ட முறையில் சரிபார்த்து, பின்னர் தள்ளுபடி அளிக்கிறார். "பலர் சன்னி லியோனை மோசமான பார்வையில் பார்க்கிறார்கள். ஆனால் நான் அவர்களுடைய தீவிர ரசிகன். அவர் ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து மேலும் பல அனாதை குழந்தைகளுக்கு உதவியுள்ளார். அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்குச் செலவிடுகிறார். அதனால் இந்த சலுகையை அறிவித்துள்ளேன். சன்னியின் ரசிகர்கள் எப்போதும் எனது கடைக்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR