மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரு நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் 'நாக மண்டபத்தை' சனிக்கிழமை திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீக பணிகளை துவக்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதல்வர் திரு. பொம்மை, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கே.சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை அர்பணித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள நாக மண்டபம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.



ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளை பற்றி குறிப்பிட்ட முதல்வர் திரு. பொம்மை அவர்கள், "மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குரு அவர்களின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப்பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு நன்மை தருகின்ற வகையில் மண்ணின் தரத்தைப் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. சத்குரு நமது விவசாயிகளின் இதயங்களில் இருக்கிறார்" என்றார். 



ஆன்மீக உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசிய சத்குரு, "சிக்கபல்லாப்பூர் அருகே உள்ள மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை, எட்டு நவக்கிரக கோவில்கள் மற்றும் தனித்துவமான பைரவி கோவில் ஆகியவை அமைக்கப்படும்". என்று கூறினார்.



மேலும் இந்த செயலில் ஈடுபட மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அவர் நாக மண்டபத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், "ஒருவரது வாழ்க்கையில் காணப்படாத தடைகளை அகற்றுவதில் நாகத்தின் அருள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் பாம்பு வழிபாட்டைக் கொண்டுள்ளன." என்றார்.


மேலும் படிக்க | சத்குருவை சந்தித்து ஆசி பெற்ற உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்


மேலும் படிக்க | மண் வளத்தை பாதுகாக்க ஐநாவின் ஒலித்த சத்குருவின் குரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ