ஹிஜாப் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் பவசராஜ் பொம்மை வேண்டுகோள்
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
பெங்களூரு: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இதனையடுத்து பேசிய மாநில முதலமைச்சர் பசவராஜ், மக்கள் அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை மாணவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பவசராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை என்று கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டது,
முதல்வர் பசவராஜ் பொம்மை ஹிஜாப் வழக்கு விஷயத்தில் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த தீர்ப்பினை ஏற்று பள்ளிகளுக்கு திரும்பவேண்டும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்றாக புரிந்துகொண்டு படித்து வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் கலந்துகொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என மாணவர்களுக்கு பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் எனவும் ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.
மாநில அரசின் நிலைப்பாட்டை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றம் சென்ற மாணவிகள் தீர்ப்பை பின்பற்ற வேண்டும், மற்ற விஷயங்களை விட கல்வி முக்கியம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என்று தெரிவித்த கர்நாடக உயர்நீதிமன்ற சட்ட அமர்வு, ஹிஜாபுக்கு தடை விதித்தது செல்லும் என்று தெரிவித்தது.
மேலும் படிக்க | ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு... பெங்களூருவில் கூட்டம் கூட தடை