ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு... ஜெயிக்கப் போவது யார்? பெங்களூருவில் கூட்டம் கூட தடை

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு பெங்களூருவில் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Mar 15, 2022, 09:24 AM IST
  • ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு...
  • ஜெயிக்கப் போவது யார்?
  • பெங்களூருவில் கூட்டம் கூட தடை
ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு... ஜெயிக்கப் போவது யார்? பெங்களூருவில் கூட்டம் கூட தடை  title=

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு வரவிருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டம்
பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் எதிர்த்தனர்.

hijab
அவர்களில் சிலர் சீருடை மீது தலைப்பகுதியை மூடும் உடையான ஹிஜாப் எனப்படும் புர்காவை அணிந்து வந்தனர். இதனால், வகுப்பறையில் நுழைய அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது. 

பள்ளி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்ததை அடுத்து, பரபரப்புத் தொற்றியது.  

 இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

மாணவிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. 

வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும், இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் படிக்க | ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கல்வி நிறுவனங்களில் தலையை மூடும் வகையிலான ஆடை அணிவதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை என்று மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மத சுதந்திரத்தின் கீழ், ஹிஜாப் அணிய தடை இல்லை என்றும், பொது ஒழுங்கு மீறலைக் கருத்தில் கொண்டு அதைத் தடை செய்ய முடியுமா? என்றும் மாணவிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.  

சமூக ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நியாயமான கட்டுப்பாடுகளைத் தவிர, இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான மாணவிகளின் வழக்கு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இன்று ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால், கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் கூடவும் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தடையானது இன்று முதல் (2022 மார்ச் 15ந்தேதி முதல் மார்ச் 21ந்தேதி வரை) ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: உடுப்பியில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News