கர்நாட்டக முதல்வர் HD குமாரசாமி அவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பின் போது JDS மூத்த தலைவர் டேனிஸ் அலி, வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்தனர். சமீபத்தில் நடைப்பெற்ற கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் JDS மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. காங்கிரஸ் ஆதரவுடன் HD குமாரசாமி முதல்வர் பதவியேற்றார்.



இந்நிலையில் நீதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி சென்றுள்ள HD குமாரசாமி அவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.


இச்சந்திப்பில் இருவரும் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோனை செய்ததாக தெரிகிறது. மேலும் கர்நாட்டகாவில், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவிற்கு JDS கட்சியின் சட்டப்பிரிவு ஆலோசனை குழுவிற்கும் உள்ள வேறுபாடுகளை குறித்து HD குமாரசாமி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி அவர்களை கர்நாட்டக முதல்வர் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனிசமான மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இன்னும் காவிரி வாரியம் அமைக்கப்படவில்லை. 


காவிரி வாரியத்திற்கான தலைவர், தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரும் இதுவரை கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது, இதனால் வாரியம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. 


இதுகுறித்து நேற்று நிதி ஆயோக் கூட்டத்தில் வாரியம் அமைக்க தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். விரைந்து உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் காவிரி பங்கீடு தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.