Mekedatu Issue: தமிழக அரசிடம் பேசுவது அவசியம் அற்றது -காங்கிரஸ் தலைவர்
இது முற்றிலும் கர்நாடகாவின் திட்டமாகும், இது ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டின் பங்கைப் பறிக்கப் போவதில்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.
மங்களூரு: மேகதாது அணை (Mekedatu dam in Karnataka) முற்றிலும் கர்நாடகாவின் திட்டமாகும். தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதும், அவர்களுடன் பேச்சுவாரத்தை நடத்துவதும் கர்நாடகாவிற்கு பயன்கள் கிடைக்காது. எடியூரப்பா அரசு மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் உங்களை அரசியல் ரீதியாக ஆதரிப்போம். டெண்டர்களை அழைத்து பணியைத் தொடங்குங்கள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
ஜூலை 5 முதல் ஜூலை 7 வரை மூன்று நாள் கடலோர மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் (D K Shivakumar) நேற்று மங்களூருரில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது மற்றும் டெண்டர் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
தமிழகத்துடன் பேசுவது அவசியம் இல்லை:
"எடியூரப்பா (Chief minister of Karnataka) தமிழக முதல்வரிடம் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவர்களுக்கு (பாஜக) மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு (BJP government) தான் உள்ளது. இரண்டு இடங்களிலும் பாஜக ஆட்சி இருப்பதால் கர்நாடகாவில் அனைத்து வளர்ச்சி பணிகளும் சுமூகமாக நடக்கும் என்று அவர்கள் (எடியூரப்பா) கூறுகின்றனர். எனவே, இப்போது தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதும், மத்தியஸ்தம் செய்வதும் கர்நாடகாவிற்கு நன்மைகளை வழங்காது. நாங்கள் (கர்நாடகா காங்கிரஸ்) உங்களை அரசியல் ரீதியாக ஆதரிப்போம். டெண்டர்களை அழைத்து பணியைத் தொடங்குங்கள்" என்று சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
ALSO READ | மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை : TN Govt
மேகதாது அணை 2, 3 ஆண்டுகளில் கட்டப்பட வேண்டும்:
அவர் மேலும் கூறுகையில், “இது முற்றிலும் கர்நாடகாவின் திட்டமாகும் (Karnataka’s scheme), இது ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டின் பங்கைப் பறிக்கப் போவதில்லை. இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை கூட நாங்கள் வாங்கப்போவதில்லை. இந்த திட்டத்தின் மூலம் அணைக்கட்ட கிட்டத்தட்ட 95% பகுதிகள் எனது தொகுதியில் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 500 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது, மீதமுள்ளவை அரசுக்கு சொந்தமானது. மேலும், எனது தொகுதியிலும் அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இது முற்றிலும் எங்கள் உள் பிரச்சினை மற்றும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அணை கட்டப்பட வேண்டும். இதனால் பெங்களூருக்கு குடிநீர் (Water supplied to Bengaluru) வழங்க முடியும். எனது தொகுதியில் அணை கட்ட முன்மொழியப்பட்டாலும், அதில் தேங்கும் தண்ணீர் பெங்களூரு நகருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.
மத்திய அரசு உதவி தேவையில்லை:
டி.கே.எஸ் மேலும் கூறுகையில், “இந்த மேகதாது அணை (Mekedatu dam) திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து பொருளாதார உதவிகளை கர்நாடகா அரசு பெறத் தேவையில்லை என்றார். ஏனென்றால் மேகதாது அணைக்கட்ட தேவையான நிலம் மாநிலத்திற்கு சொந்தமானது. நீர் எங்களுடையது மற்றும் அதற்காக எங்கள் பணத்தை செலவிடுகிறோம். இதுபோன்ற திட்டங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்பதை மிகத் தெளிவுபடுத்தும் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உள்ளன” எனக் கூறினார்.
ALSO READ | மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை: மத்திய அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR