நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யலாம்: ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு
Non Bailable arrest Warrant to Nithyananda: சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நித்யானந்தவிற்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்தது நீதிமன்றம்
பெங்களூரு: நித்யானந்தவிற்கு கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் இருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தா சாமியார் கோர்ட்டில் ஆஜராக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இதுவரை ஆஜராகவில்லை.
நித்யானந்தா மீதான பாலியல் வ ன்கொடுமைவழக்கு, நேற்று (ஆகஸ்ட் 18) கர்நாடகாவின் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நித்யானந்தா சாமியார் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
மேலும் படிக்க | ‘நான் இன்னும் சாகவில்லை… ஆனால் சமாதியில் இருக்கிறேன்’ நித்யானந்தா விளக்கம்
அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நித்தியானந்தா மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்ய இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்தியானந்தா தனது ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோ பதிவு மூலம் தரிசனம் அளித்து வருகிறார்.
மேலும் படிக்க | நித்தியானந்தாவுக்கு சிலை, கும்பாபிஷேகம்... பரபரப்பை கிளப்பிய பக்தர்
மேலும் படிக்க | கைலாசாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விடும் நித்தி - அடுத்த அலப்பறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ