நித்தியானந்தாவுக்கு சிலை, கும்பாபிஷேகம்... பரபரப்பை கிளப்பிய பக்தர்

நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 11, 2022, 04:14 PM IST
  • நித்தியானந்தாவுக்கு சிலை வைத்த பக்தர்
  • சிலை வைத்தது மட்டுமின்றி கும்பாபிஷேகமும் செய்தார்
நித்தியானந்தாவுக்கு சிலை, கும்பாபிஷேகம்... பரபரப்பை கிளப்பிய பக்தர் title=

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்தக் கோயிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதேபோன்று கோயிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரமாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் காவல் துறையினரும், மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க | தமிழகமெங்கும் தலைவரின் சுற்றுப்பயணம்; மாநில செயற்குழுக் கூட்ட தீர்மானங்கள் !!

ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப்போல் இந்த சிலை இருந்தது. இதுகுறித்து கோயில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர். ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி உள்ளது என்று கூறினர். 

Nithyanandha

பின்னர், கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்தபோது. அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும், நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் போன்ற புகைப்படங்கள் இருந்தன. 

மேலும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளர் பதவி - தேர்தல் நடத்தும் அதிகாரியாக விசுவநாதன், ஜெயராமன் நியமனம்

இச்சூழலில் பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் காவல் துறையினர் நித்தியானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பக்தர்களும் அந்த சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முருகன் கோயில் கட்டி அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  படிக்க | அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் - அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News