சாமியார் நித்யானந்தாவின் சிலைக்கு பூஜை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் அவர் சமாதி நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nithyananda Latest News: கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
கைலாசாவில் இருந்தவாறு உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் நித்யானந்தா பங்கேற்றார். அவரது ஆசிரமம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்களை வாங்க பக்தர்கள் முண்டியடித்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
வீடியோவில் அருள் பாலிக்கும் நித்தியானந்தாவின் புது அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் உபதேசம் செய்கிறார் நித்தியானந்தா....
அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டினால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறும் என்றும், அதற்காக அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என தலைமறைவாக இருக்கும் போலி சாமியாரான நித்யானந்தா வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என வரும் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டையே உருவாக்கி உள்ள நித்யானந்தா தற்போது தன்னை பரமசிவன் என்றும், தன்னை நீதிதுறையால் தொட கூட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.