12:15 16-07-2019
ராஜிநாமா கடித்தத்தை 11 பேர் மட்டுமே நேரில் அளித்துள்ளனர். 4 பேர் நேரில் அளிக்கவில்லை என கர்நாடக சட்டப்பேரவைத் தலைவரின் வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி நீதிபதியிடம் கூறியுள்ளார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12:01 16-07-2019
நாங்கள் தாக்கல் செய்யப்பட மனுவில் எந்தவித முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட வில்லை. முகுல் ரோத்தகியின் வாதம் முற்றிலும் தவறானது என கர்நாடக சட்டப்பேரவைத் தலைவரின் வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.



11:55 16-07-2019
சட்டப்பேரவைத் தலைவர் தாக்கல் செய்துள்ள மனுவில் முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிருப்தி எம்எல்ஏக்களின் வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.



11:35 16-07-2019
ஒரு கட்சியில் இருக்க பிடிக்காமல் தான் ராஜினாமா செய்தோம். அப்படி இருக்க எங்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள சொல்வதும், பிடிக்காத கட்சியின் கொரடா உத்தரவை மதிக்க சொல்வதும் எந்த வகையில் நியாயம். மேலும் தற்போது, கர்நாடகத்தில் மைனாரிட்டி அரசு உள்ளது. இந்நிலையில் எங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கு பெறச்செய்து, அதன் மூலம் எங்களை தகுதி நீக்கம் செய்து, அரசை காப்பாற்ற நினைக்கிறார் சபாநாயகர் என என அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது



புதுடில்லி: தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கு இன்று விசாரணை.


கர்நாடகாவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏகள் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி மற்றும் சபாநாயகர் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதம் செய்து வருகின்றனர்.


வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பேசுகையில், தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்க்க 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். 8 எம்எல்ஏக்களும் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. நேரடியாக ஆஜராகி கருத்து சொல்லாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது என வாதம் செய்தார். மேலும் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் விதிக்க முடியாது எனவும் கூறினார்.


வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தரப்பில், சபாநாயகராக இருந்தாலும் நீதிமன்றங்களுக்கு பதில் அளிப்பது அவரது கடமை. எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வாதம் செய்தார்.


இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, சபாநாயகர் ராஜினாமா கடிதத்தின் மீதோ அல்லது தகுதி நீக்க நடவடிக்கையோ எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும். வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தனர். 


இந்தநிலையில், இன்று இந்த மனுக்கள் மீதனா விசாரணை நடைபெற்ற உள்ளது. அதுமட்டுமில்லாமல், மேலும் தங்களுடைய ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதுவும் இன்று விசாரிக்கப்பட உள்ளது.