Prajwal Revanna Case Latest Updates: முன்னாள் பிரதமர் ஹெச்டி தேவகௌடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவருமான பிரஜ்வெல் ரேவண்ணா மீது கடந்த சில நாள்களுக்கும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, அவர் சார்ந்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் லீக்காக தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் இந்த விவகாரம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற பிரஜ்வெல்...


ஹசன் மக்களவை தொகுதியில் பிரஜ்வெல் ரேவண்ணா தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் கடந்த ஏப். 26ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெற்றுவிட்டது. இருப்பினும், அதன்பின் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


மேலும் படிக்க | மக்களவை தேர்தல் 2024... பிரியங்கா - ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!!


இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இருப்பினும் ரேவண்ணா ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தாலும் தான் பெங்களூருவில் இல்லை என அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


ராகுல் காந்தி கோரிக்கை 


அவரை கைது செய்யக்கோரி கர்நாடக காவல்துறைக்கு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவு விரைந்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


சிபிஐயை நாடிய கர்நாடக அரசு 


இந்நிலையில், காவல்துறையால் தேடப்பட்டு வரும் பிரஜ்வெல் ரேவண்ணாவை கண்டுபிடித்து அவரை கைது செய்ய கர்நாடகா அரசு சிபிஐயை நாடியுள்ளது. வெளிநாடுகளின் உதவியை கேட்டு பிரஜ்வெல் ரேவண்ணாவை கண்டுபிடிக்க சிபிஐயிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 


பிரஜ்வெல் ரேவண்ணாவின் விவகாரம் வெளிவர தொடங்கியதில் இருந்து அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர். அவர் போட்டியிட்ட ஹசன் தொகுதி முழுவதும் அவரின் ஆபாச வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 


தொடரும் குற்றச்சாட்டுகள்


இதை தொடர்ந்து ஒரு பெண் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதில் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை பலமுறை பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அந்த புகாரில், பிரஜ்வெல் ரேவண்ணா தனது மகளிடம் மொபைல் காலில் அத்துமீறியதாகவும், ஆபாசமாக உரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும், பிரஜ்வெல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அவரின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் ஒருவரும் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், ஒருமுறை பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை அவரின் எம்.பி., குடியிருப்புக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் சொன்னால் தன்னையும், தனது கணவரையும் தீர்த்துக்கட்டிவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார் என போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். 


மேலும் படிக்க | துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ