துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!

Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2024, 03:37 PM IST
  • இந்த புகாரை அடுத்து சிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
  • பிரஜ்வெல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
  • அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்! title=

Prajwal Revanna Latest News Update: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெறுகிறது. ஏப். 19ஆம் தேதி முதல் கட்டமும், ஏப். 26ஆம் தேதி இரண்டாம் கட்டமும் நிறைவடைந்த நிலையில், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் 26 தொகுதிகளிலும், கர்நாடகாவின் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தின் 10 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் 8 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், அசாமில் 4 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதியிலும், தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி மற்றும் தாமன் மற்றும் டையூவில் 2 தொகுதிகளிலும் என 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் மொத்தம் 96 தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

ஆபாச சர்ச்சையில் பிரஜ்வெல் ரேவண்ணா

அந்த வகையில், தேர்தலையொட்டி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கடந்த வாரம் பிரஜ்வால் ரேவன்னா பாலியல் குற்ற வழக்கில் சிக்கியிருப்பது நாட்டையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. பிரஜ்வெல் ரேவன்னா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடாவின் பேரன் ஆவார். இவர் தற்போது கர்நாடகாவின் ஹசான் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் ஆவார். 

மேலும் படிக்க | விரைவில் கைது உறுதி.! பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசு லுக்அவுட் நோட்டீஸ்

பிரஜ்வெல் பாலியல் ரீதியாக பல பெண்களிடம் அத்துமீறியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 33 வயதான பிரஜ்வெல் ரேவண்ணா பல்வேறு பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆபாச காணொலிகள் சமூக வலைதளங்களில் லீக்காக தொடங்கியது. 

சிஐடி வழக்குப்பதிவு

இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹசன் தொகுதியில் கடந்த ஏப். 26ஆம் தேதியே தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலயைில், இவர் தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது பிரஜ்வெல் ரேவண்ணா மீது மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் பெண் தொண்டர் அளித்த புகாரை தொடர்ந்து சிஐடி பாலியல் வன்புணர்வு வழக்கை பதிவு செய்துள்ளது. அந்த பெண் தனது புகாரில் பிரஜ்வெல் தன்னை எம்.பி., குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடகாவில் பரபரப்பு

மேலும், பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோ எடுத்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதை வேறு யாரிடமாவது கூறினால், தன்னையும் தன் கணவரையும் கொன்றுவிடுவதாக பிரஜ்வெல் ரேவண்ணா மிரட்டியதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

சிஐடி காவல்துறையினர் பிரஜ்வெல் ரேவண்ணாவுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ஆடைகளை அவிழ்த்தல், ஆபாச வீடியோ எடுத்தல் மற்றும் புகார்தாரரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தல் தொடர்பான பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கர்நாடகாவில் பரபரப்பை அதிகமாக்கி உள்ளது. 

மேலும் படிக்க | பிரஜ்வால் ஆபாச வீடியோ குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News