மக்களவை தேர்தல் 2024... பிரியங்கா - ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!!

Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2024, 03:28 PM IST
  • அமேதியில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
  • கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டார்.
  • பிரியங்கா மற்றும் ராபர்ட் வத்ரா ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவை தேர்தல் 2024...  பிரியங்கா -  ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!! title=

Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாளான இன்று ரேபரேலியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது. அமேதியில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி ஏற்கனவே போட்டியிட்ட நிலையில் தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி  அமேதியில் போட்டியிட்ட நிலையில், தற்போது ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அதே நேரத்தில் அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

முன்னதாக, ரேபரேலியில் பிரியங்கா காந்தி வதேராவையும், அமேதியில் ராகுலையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தலாம் என ஊகிக்கப்பட்டது. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டது. இருப்பினும், இன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது, ​​அந்த பட்டியலில் பிரியங்காவோ அல்லது ராபர்ட் வத்ரா பெயரோ இடம்பெறவில்லை.

இந்நிலையில், பிரியங்கா மற்றும் ராபர்ட் வத்ரா ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரியங்கா காந்தி போட்டியிட்டால், குடும்ப அரசியல் என காங்கிரஸை விமர்ச்சிக்க பாஜக மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்ததால், போடியிடமால் விலகியுள்ளார் என கூறப்படுகிறது. காங்கிரஸ் குடும்பத்தை மையமாகக் கொண்ட கட்சி என்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இப்போது, ​​கே.எல். ஷர்மா என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கியுள்ளதன் மூலம், அக்கட்சியும் 'குடுமப் அரசியல்' குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க முயற்சித்துள்ளது. ராபர்ட் வதேரா நிலம் தொடர்பான ஊழல்களில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வால் குற்றம் சாட்டப்பட்டதால், காங்கிரஸ் அவரை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மா

மற்றொரு காரணம் காந்தி குடும்பத்தில் உள்ள போட்டி உணர்வு என கூறப்படுகிறது. இதனால் பிரியங்கா காந்தி போட்டியிடமால் தவிர்த்திருக்கலாம் என்கின்றன சில தகவல்கள். கிளர்ச்சி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில பாஜக தலைவர்கள் இது குறித்து கூறுகையில், கட்சியில் உள்ள காங்கிரஸில் உள்ள ராகுல் காந்தி ஆதரவு பிரிவினர் பிரியங்கா காந்தி தேர்தல் களத்தில் இறங்குவதை விரும்பவில்லை என்கின்றனர். ஏனெனில் இது கட்சியின் மீதான ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டிற்கு சவாலாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

சகோதரன்-சகோதரி இருவருக்குமிடையில் பகை ஏதும் இல்லை என காங்கிரஸ் மறுத்தாலும், இந்தியா முழுவதும் கட்சிக்காக பிரச்சாரம் செய்த போதிலும் பிரியங்காவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு போட்டி உணர்வு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றால், அவர் ரேபரேலியைத் தக்க வைத்துக் கொள்வார் என்றும், இடைத்தேர்தலில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வதேரா நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News